ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ சிகாகிரீஸ்வரர் ஸஹாயம்

             குடுமியான்மலை தர்மக்ஞ  ஸ்ரீ பஞ்சாபகேச தீக்ஷிதர் நினைவாக  K.A. பஞ்சாபகேச தீக்ஷிதர் சாரிடபிள் டிரஸ்ட் (Regd. No. 76/2014) மூலம் நடத்தப்படும் குடுமியான்மலை பங்குனி உத்தர நூறாவது வருஷ [2015] வேத பாராயண ஸந்தர்ப்பணை கைங்கர்ய பத்திரிகை 

ஜய வருஷம் பங்குனி மாதம் 11ம் தேதி புதன்கிழமை முதல் 20ம் தேதி வெள்ளிக்கிழமை வரை ( 25/03/2015  - 03/04/2015 )
नित्याय नित्योत्सव मङ्गलाय नीहारभानुस्फुट शेखराय  ।
रिलोचनाय त्रिपुरान्तकाय शिखागिरीशाय नमश्शिवाय  ॥
शिखागिरीश भामिनीं शिखरिमूल सञ्चारिणीं शिवाङ्ग सुखवासिनीं शिवकटाक्ष सन्दायिनीम् ।
शिवङ्करकरामुमां शिरसिदीप्त नानासुमां शिवामखिलदायिकां अखिलनायिकामाश्रये ॥

அன்பரீர்,
         கடந்த 2014 ஆம் ஆண்டு தாங்கள் அளித்த நன்கொடை வேதபாராயண கைங்கர்யத்தில் சேர்க்கப்பட்டது. மிக்க நன்றி.  இத்துடன் 2015 ஆம் ஆண்டு வேதபாராயண பத்திரிகை அனுப்பியுள்ளோம்.  தாங்கள் தொடர்ந்து நல்லாதரவு அளித்து இறையருளைப் பெற வேண்டுகிறோம்.
                  புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை என்னும் திவ்ய க்ஷேத்திரத்தில் பக்த  ரக்ஷணத்திற்காக ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சிகாகிரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்கி திருவருள் பாலித்துவரும் இறைவனின் பங்குனி உத்தர உத்ஸவ காலத்தில் வம்ச பரம்பரையாக நடத்திவரும் லோக க்ஷேமார்த்தமான வேதபாராயணம் மற்றும் ஸமாராதனை ஸ்ரீ ச்ருங்கேரி ஜகத்குரு மஹாஸ்வாமிகள், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஆகியோரின் பரிபூரணமான அனுக்ரஹத்துடன் மதுரை ஸ்ரீ M. சுப்பய்யர் டிரஸ்ட் மற்றும் பல அறக்கட்டளைகள், ஆஸ்திக அன்பர்கள்   ஆதரவுடனும் நிகழும் ஜய வருஷம்  பங்குனி மாதம் 11ம் தேதி புதன்கிழமை முதல் 20ம் தேதி வெள்ளிக்கிழமை வரை ( 25/03/2015  - 03/04/2015 ) நூற்றாண்டை முன்னிட்டு நான்கு வேத பாராயணங்கள் மற்றும் உபன்யாஸங்களுடன் 10 நாட்கள் சிறப்பாக நடக்கவிருப்பதால் ஆஸ்திக பெருமக்கள் இவ்வருஷமும் இந்த அரிய கைங்கர்யத்தில் கலந்து கொண்டு இஹபரசுகத்தை அடைய பிரார்த்திக்கின்றோம்.
                            “வேதோகிலோதர்ம மூலம்” வேதமே அறங்களின் ஆணிவேர் என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க மறையொலி எங்கும் முழங்கி அதன் மூலம் உலகம் இயற்கை உற்பாதங்களிலிருந்து விடுபட வேத பாராயணம் மிகவும் இன்றியமையாதது என்பது மறுக்க முடியாத சத்ய வாக்காகும்.  எல்லோரும் இன்புற்றுவாழ  பலச்ருதிகள் அடங்கிய இந்த வேத பாராயணத் தொண்டிற்கு பேராதரவு அளித்து இறையருளைப் பெற்றுய்ய வேண்டுகிறோம். அது சமயம்  வேதங்களின் பெருமை மற்றும் அவற்றால் விளையும் நற்பலன்கள் பற்றி வித்வான்களின் உபன்யாஸமும்  நடைபெறும்.

                                                                                                    இங்ஙனம்
                                                                                          தலைவர் & டிரஸ்டிகள்
                                                                               K.A. பஞ்சாபகேச தீக்ஷிதர் சாரிடபிள் டிரஸ்ட்                                                                               (Regd. No. 76/2014) 

 நன்கொடைகளை K A P D CHARITABLE TRUST என்ற பெயரில்  DD/Crossed Cheque வாயிலாக பின் வரும் முகவரிக்கு அனுப்பலாம்.

P. Krishnamurthy,
Treasurer K A P D Charitable Trust, 
Lakshmi Nivas, F2 A Block, 
Krishnarekha Apts,
No. 11 SRVS Colony, 
Keelkattalai,
Chennai-600117. 
Cell  9444979959

On line contributions [ NEFT] may please be sent to

K A P D CHARITABLE TRUST CUB,
Madipakkam Branch
Account Number 500101010466104
IFSC CIUB0000151. 
Credit information may invariably please be mailed to kapdtrust@gmail.com 
  
Please visit  www.kudumiyanmalaivedam.com
குறிப்பு:  புதுக்கோட்டையிலிருந்து குடுமியான்மலை டவுன் பஸ் எண் : 5, 5B, 28 ரூட் பஸ்: மணப்பாறை, துவரங்குறிச்சி, திருச்சி to குடுமியான்மலை  காலை 8.00 மணி [PLA] பிற்பகல் 2.00 மணி [லக்ஷ்மி] மாலை 6.00 மணி [PLA].

வேதபாராயண முகவரி:  

Gopalakrihna Bagavathar Bajan Hall 

( G.A.Trust, Narasimha Jayanthi Namasankeerthana Mandapam)

T.S. No. 2990, 

East 3rd Street,

 Pudukkottai-622001. 

முக்கிய அறிவிப்பு :  தினசரி காலை 8.00 மணி மதல் 11.30 மணி வரை குடுமியான்மலை ஸ்வாமி ஸந்நிதியில் வேதபாராயணம் நடைபெறும்.  மாலை, இரவு வேதபாரயணமும் ஸமாராதனை  முதலிவைகளும் மேற்கண்ட முகவரியில் நடைபெறும்.