புதுக்கோட்டை மாவட்டத்தில்
புதுக்கோட்டை நகருக்கு மேற்கு திசையில் 20
கி.மி தூரத்தில் அமைந்துள்ளது குடுமியான்மலை எனும் சிற்றூர். இங்கு எழுந்தருளி
விளங்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ சிகாகிரீஸ்வரர் ஆலயம் 2000
ஆண்டுகள் பழமையானது. மஹிமை தங்கிய இறைவன் ஸ்ரீ நிகேதாசலேஸ்வரர் எனவும்
ஜயந்தவனேஸ்வரர் எனவும் சிகாகிரீஸ்வரர் எனவும் திருநாமம் பெற்று அகிலாண்டேஸ்வரி
ஸமேதராய் இந்திரனால் பூஜிக்கபெற்று மகப்பேறு அடைந்த சிறப்புடையது இந்த ஸ்தலம்,
அகஸ்தியர், ஹேமமகரிஷி, சுதீக்ஷ்ணர் முதலிய முனிவர்களாலும், ராவண ஸம்ஹார
ப்ரஹ்மஹத்யாதி தோஷ நிவாரணமாக ஸுக்ரீவாதி ஹனுமத் ஸமேதரான ஸ்ரீ ராமச்சந்திர
மூர்த்தியாலும் பூஜிக்கப் பெற்றது இத்தலம். ஸ்வேதகேது, நளன், காங்கேயன், மீனத்வஜன்,
சுந்தர பாண்டியன், பல்லவ மன்னர் முதலியவர்களால் நிர்மாணிக்கபட்ட ஆயிரக்கால்
மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், அணியொட்டிக்கால் மண்டபம் தசாவதாரம் முதலிய எழில்
மிகு சிற்பங்கள், கல்வெட்டுகள், குடவரைக் கோயில் முதலியன பார்க்கப் பார்க்கத்
திகட்டாதவை. மலை உச்சியில் விநாயகர், தண்டபாணி அறுபத்துமூவர் மற்றும் கோயிலின்
நுழை வாயிலில் வீரஹனுமார் தர்சனம் வரப்ரஸாதம். கோயிலில் இரு தீர்த்தங்களும்
சுற்று வட்டாரத்தில் உள்ள ஒன்பது தீர்த்தங்களும் மிகவும் சுவையானவை. சிற்பங்களும்
கல்வெட்டுக்களும் மண்டபங்களும் இந்திய தொல்பொருள் பாதுகாப்பு துறையினராலும் கோவில்
பூஜை முதலியன தமிழக அரசின் அறநிலையத் துறையாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த அற்புதமான
க்ஷேத்ரவாஸியான பிரம்மஸ்ரீ ராமஸ்வாமி கனபாடிகள் என்பவர் இவ்வாலயத்தின்
பிரம்மோத்ஸவமான பங்குனி உத்தரத் திருவிழாவில் அன்பர்கள் உதவியுடன் வேதபாரயணம்
நடத்திவந்தார். அவருக்கு குடுமியான்மலை தர்மக்ஞ ஸ்ரீ பஞ்சாபகேச தீக்ஷிதர் இந்த வேத
பாராயண கைங்கர்யத்தில் உதவியாக இருந்து நடத்திவந்தார். பின்னர் 1927ல்
முழு பொறுப்பையும் தர்மக்ஞ ஸ்ரீ பஞ்சாபகேச தீக்ஷிதரிடம் ஒப்படைத்து பிரம்மஸ்ரீ
ராமஸ்வாமி கனபாடிகள் கால கதியடைந்தார். இக்கைங்கர்யம் 1982
வரை தர்மக்ஞ ஸ்ரீ
பஞ்சாபகேச தீக்ஷிதர் தமது புதல்வர்கள் ஸ்ரீ சுந்தரம் மற்றும் ஸ்ரீ சிகாகிரீசன்
உதவியுடன் மிகச் சிறப்பாக நடத்தி கால கதியடைந்தார். 1983
முதல் 2013
வரை ஸ்ரீ சிகாகிரீசன் அவர்கள் இந்த வேத பாராயண கைங்கர்யத்தை தனது சஹோதரர் ஸ்ரீ
சுந்தரத்தின் உதவியுடன் தொடர்ந்து மிகச்சிறப்பாக நடத்தி வந்தார். ஸ்ரீ சுந்தரம்
அவர்கள் 2012ல் கால
கதியடைந்தார். ஸ்ரீ சிகாகிரீசன் தனது வயோதிகத்தின் காரணமாக இக்கைங்கர்யம் தடையின்றி
தனக்குப் பிறகும் தொடர்ந்து நன்முறையில் நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில்
இக்கைங்கர்யத்தை 80
ஆண்டுகள் சிறப்பாக நடத்தி வந்த குடுமியான்மலை தர்மக்ஞ ஸ்ரீ பஞ்சாபகேச தீக்ஷிதர்
நினைவாக K.A.
பஞ்சாபகேச தீக்ஷிதர் சாரிடபிள் டிரஸ்ட்
என்ற பெயரில் ஒரு டிரஸ்டை
உருவாக்கி அதனிடம் பொறுப்புகளையும் வரவு செலவு கணக்கு முதலியவற்றையும் ஒப்படைக்க
விரும்பிய வண்ணம் குடுமியான்மலை பங்குனி உத்தர வேத பாராயண சந்தர்ப்பணை கமிட்டி
உறுப்பினர்கள்
13/10/2014
புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் கீழ் கண்டவர்களை ஒருமனதாக
நிரந்தர
டிரஸ்டிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்தனர்.
1.
ஸ்ரீ P. சிகாகிரீசன்
ஸ்தாபகர் & தலைவர்
2.
ஸ்ரீ S. லக்ஷ்மண
கனபாடிகள் டிரஸ்டி & செயலாளர்
3.
ஸ்ரீ P.
கிருஷ்ணமுர்த்தி டிரஸ்டி &
பொருளாளர்
4.
ஸ்ரீ R. கிருஷ்ணன்
டிரஸ்டி
5.
ஸ்ரீ S.
பாலகிருஷ்ணன் டிரஸ்டி
100வது
வருஷமாக இந்த வேத பாராயணம் ஸ்ரீ லக்ஷ்மண கனபாடிகள் டிரஸ்டி & செயலாளர்
[Cell
9444320464]
தலைமையில் இவ்வாண்டு மிகச் சிறந்த முறையில் கோபாலக்ருஷ்ண பாகவதர் பஜன் ஹால் ( G.A.Trust, Narasimha Jayanthi Namasankeerthana Mandapam)
T.S. No. 2990,
கீழ
3ம்
வீதி
புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. ஆஸ்திகோத்தமர்கள் அனைவரும் தொடர்ந்து நல்லாதரவு
நல்கி இப்பணி அவிச்சின்னமாக சிறப்பாக நடைபெற உதவிடும்படி மிகத் தாழ்மையுடன்
கேட்டுகொள்கிறோம்.
அறப்பணியில் என்றும் தங்கள்
தலைவர் & டிரஸ்ட்டிகள்
K.A.
பஞ்சாபகேச தீக்ஷிதர் சாரிடபிள் டிரஸ்ட்
(Regd. No. 76/2014)